Translate

Sunday, May 6, 2012

பேனாவிடமிருந்து .....

கழுத்து அமுக்கப்படுகிறதாம் ....
ரத்தம் மையாய்க் கசிகிறதாம் ...
வலி வலி என முனங்கியதாம் ..
பேனாவிற்கு பிரசவமாம் ..!
பெற்றது பல நூறு வரிகளாம் ...!
அத்தனையும் முத்துக்களாம் ...!
இன்றோ ...
வயதாகி விட்டதாம்  !!!!
நானும் எழுதுகிறேன் ...
இன்டர்நெட்டில் ....
பேனாவிடம் கதை கேட்டு...!!!




Thursday, May 3, 2012

போர்வை!

பனி இரவில் ,
உன் ஸ்பரிசம் ...
எத்தனை சுகம் ..
இழுத்து அனைத்துக்  கொள்கிறேன்..
நீ முகம் வருட ...
மூடிக் கொள்கிறேன் ..
இமைகளை ...
காலையில் ....
கட்டிலின் ஓரமாய் ...
நீ ... போர்வை !!!


  

Monday, June 29, 2009

...நா...

உள்ளக் கிடங்கில்
ஒளிந்திருக்கும்
ஒட்டடையில்....
நூலாம்படையாய் பல
நூறாயிரம் சொற்கள்
தொங்கிக் கிடக்கின்றன
ஓசையின்றி..
எப்போது விழுமோ ?
எங்கு விழுமோ?
வசைச் சொல்லோ?
இன் சொல்லோ?
அவசரமாய் அவ்வப்போது
சுத்தம் செய்கிறேன்..
சத்தமின்றி என்
எலும்பில்லா நாவினால்!!

ஒட்டுப் போட்ட கவிதை!

எண்ணக் கயிற்றில்
முடிந்து வைத்த
வண்ணச் சொற்களின்
முனங்கல் கேட்டு ...
முடிச்சவிழ்த்தேன் !
பிய்த்துக் கொண்டு
வந்தன சில
நைந்த வார்த்தைகள்!
வொட்டி வெட்டி உருவாக்க..
உயிர் பெற்றது என்...
ஒட்டுப் போட்ட கவிதை!

Wednesday, June 24, 2009

கூண்டுக் கிளி..

இலையுதிர்காலம் போல் ..
சிறகுதிர்காலம் இருக்கக்கூடாதா?
வண்ணச் சிறகிருந்து...
என்ன பயன்?
கூண்டுக்குள் அல்லவா இருக்கிறேன்!
என்னைப் பார்த்து சிரிக்கிறாயே?
ஏளனமா?
சரிதான் ! உனக்கெப்படி புரியும் ..
என் க்ரீச் க்ரீச் சத்தத்தைத் தவிர?!
- கூண்டுக்குள் கிளி.