Translate

Tuesday, May 19, 2009

என் உலகம் !

என்றுமே ஒட்டாத கீழ்வானமும் கடலும்,
என்ன பேசிக்கொள்கின்றன ?
இத்தனை சிவப்பு வானில்...!
சின்ன இடைவெளியில் ,
உடை மாற்றிக்கொள்கிறது வானம்!
ரோட்டோர மொட்டை மரம்
வெட்கமின்றி சிரிக்கிறது ...
வட்ட நிலவொளியில் !!!
கசங்கிய காகிதக் குப்பைகளையும் ,
கட்டி இழுக்கிறது காற்று!
என் ஜன்னல் திரை விலக்க....
வண்ணங்கள் எத்தனை!
தொட்டி மீன்களை துணைக்கழைத்தேன்...
எட்டிப்பாரென்று...
சிரித்துக்கொண்டே சொன்னது ..
என் ஜன்னல் வழி உலகம் ..
நீயும் இந்த வீடும் மட்டுமென்று!!
வண்ணங்களில் என்னைச் சிதறவிட்ட நான்...
ஒன்றை மறந்து விட்டேன்...
எப்போதும் போல்,
என் பேனாவின் ,
ஒற்றைச் சொல்லுக்காய் ..
காற்றில் ஆடியபடி காத்திருக்கும்,
ஓர் வெற்றுக் காகிதத்தை !!

2 comments:

  1. //சின்ன இடைவெளியில் ,
    உடை மாற்றிக்கொள்கிறது வானம்!
    ரோட்டோர மொட்டை மரம்
    வெட்கமின்றி சிரிக்கிறது ...//

    அருமை!

    ReplyDelete
  2. //மறந்து விட்டேன்...
    எப்போதும் போல்,
    என் பேனாவின் ,
    ஒற்றைச் சொல்லுக்காய் ..
    காற்றில் ஆடியபடி காத்திருக்கும்,
    ஓர் வெற்றுக் காகிதத்தை !!///
    Class:)

    ReplyDelete