உள்ளக் கிடங்கில்
ஒளிந்திருக்கும்
ஒட்டடையில்....
நூலாம்படையாய் பல
நூறாயிரம் சொற்கள்
தொங்கிக் கிடக்கின்றன
ஓசையின்றி..
எப்போது விழுமோ ?
எங்கு விழுமோ?
வசைச் சொல்லோ?
இன் சொல்லோ?
அவசரமாய் அவ்வப்போது
சுத்தம் செய்கிறேன்..
சத்தமின்றி என்
எலும்பில்லா நாவினால்!!
Translate
Monday, June 29, 2009
ஒட்டுப் போட்ட கவிதை!
எண்ணக் கயிற்றில்
முடிந்து வைத்த
வண்ணச் சொற்களின்
முனங்கல் கேட்டு ...
முடிச்சவிழ்த்தேன் !
பிய்த்துக் கொண்டு
வந்தன சில
நைந்த வார்த்தைகள்!
வொட்டி வெட்டி உருவாக்க..
உயிர் பெற்றது என்...
ஒட்டுப் போட்ட கவிதை!
முடிந்து வைத்த
வண்ணச் சொற்களின்
முனங்கல் கேட்டு ...
முடிச்சவிழ்த்தேன் !
பிய்த்துக் கொண்டு
வந்தன சில
நைந்த வார்த்தைகள்!
வொட்டி வெட்டி உருவாக்க..
உயிர் பெற்றது என்...
ஒட்டுப் போட்ட கவிதை!
Wednesday, June 24, 2009
கூண்டுக் கிளி..
இலையுதிர்காலம் போல் ..
சிறகுதிர்காலம் இருக்கக்கூடாதா?
வண்ணச் சிறகிருந்து...
என்ன பயன்?
கூண்டுக்குள் அல்லவா இருக்கிறேன்!
என்னைப் பார்த்து சிரிக்கிறாயே?
ஏளனமா?
சரிதான் ! உனக்கெப்படி புரியும் ..
என் க்ரீச் க்ரீச் சத்தத்தைத் தவிர?!
- கூண்டுக்குள் கிளி.
சிறகுதிர்காலம் இருக்கக்கூடாதா?
வண்ணச் சிறகிருந்து...
என்ன பயன்?
கூண்டுக்குள் அல்லவா இருக்கிறேன்!
என்னைப் பார்த்து சிரிக்கிறாயே?
ஏளனமா?
சரிதான் ! உனக்கெப்படி புரியும் ..
என் க்ரீச் க்ரீச் சத்தத்தைத் தவிர?!
- கூண்டுக்குள் கிளி.
Friday, June 19, 2009
மழை நீர்?!
குடை கண்ணீர்
வடிக்கிறதே !
மழை நின்று
விட்டதென்றா?
வாசலில் வைத்து விட்டனர் என்றா?
வடிக்கிறதே !
மழை நின்று
விட்டதென்றா?
வாசலில் வைத்து விட்டனர் என்றா?
Wednesday, June 17, 2009
மலரே!மலரே!
விடியலைத் தேடித் தேடி ...
தொலைந்தது இரவு ...
விடியலில்!
சின்ன கோடாய் கசிகிறது...
வெயில் ஜன்னல் வழி!
மெல்ல இதழ் விரித்துச்
சிரித்தது மலர்!
சற்று நேரத்திற்குள் ,
மேள தாளமாய் இடி !
மலருக்கு மஞ்சள் நீராட்டாம்..
சொட்டு சொட்டாய்
நனைக்கிறது மழை!
தளிர் இலையோ
தண்டுக்குக் குடை பிடித்தபடி!
மறுநாள் வாடும் மலருக்கு ,
இத்தனை மெநக்கெடலா ?
ஒரு கணம் புரியவில்லை!
விளையாட்டாய் பறித்தாள்..
ஐந்து வயது அத்தை மகள் ..
ஆசையாய் சூட...
அந்த கணம் புரிந்தது!
இறைவனின் இயற்கைப்
படைப்பு எனக்காக!
மலரும் சிரித்தது ...
மரண பயமின்றி!
தொலைந்தது இரவு ...
விடியலில்!
சின்ன கோடாய் கசிகிறது...
வெயில் ஜன்னல் வழி!
மெல்ல இதழ் விரித்துச்
சிரித்தது மலர்!
சற்று நேரத்திற்குள் ,
மேள தாளமாய் இடி !
மலருக்கு மஞ்சள் நீராட்டாம்..
சொட்டு சொட்டாய்
நனைக்கிறது மழை!
தளிர் இலையோ
தண்டுக்குக் குடை பிடித்தபடி!
மறுநாள் வாடும் மலருக்கு ,
இத்தனை மெநக்கெடலா ?
ஒரு கணம் புரியவில்லை!
விளையாட்டாய் பறித்தாள்..
ஐந்து வயது அத்தை மகள் ..
ஆசையாய் சூட...
அந்த கணம் புரிந்தது!
இறைவனின் இயற்கைப்
படைப்பு எனக்காக!
மலரும் சிரித்தது ...
மரண பயமின்றி!
Tuesday, June 16, 2009
கற்பனைக் குதிரை !
சண்டித்தனம் செய்யும்
கற்பனைக் குதிரையை ,
சுண்டி இழுத்துச் சரிக்கட்டி
ஓட விட்டால்....
பேனாவின் முனை மழுங்கியும்
நிறுத்த முடியவில்லை
தறிகெட்டு ஓடும் குதிரையை !
கொஞ்சம் நில் என்றால்...
இறந்து விடும் இந்த நொடிக்காய்
காத்திருப்பதில்லை காலம் !
அடுத்த நொடியை
பிரசவிக்கச் சென்று விடுகிறது
அவசரமாக என்றது!
அது வரை அமைதியாக
இருந்த மனம்...
அட இது என் கற்பனையா என
தாவிக் குதித்தது குரங்காய்!
அடுத்த நினைவிற்கு !
உண்மை தான்..
ஒவ்வொரு நொடியும் உயிர் வாழ்வதில்லை
ஒரு நொடிக்கு மேல்!
மனம் தாவிக் குதிக்க...இப்போது
இளைப்பாறிக் கொண்டிருக்கிறது குதிரை...
என் கற்பனைக் குதிரை!
கற்பனைக் குதிரையை ,
சுண்டி இழுத்துச் சரிக்கட்டி
ஓட விட்டால்....
பேனாவின் முனை மழுங்கியும்
நிறுத்த முடியவில்லை
தறிகெட்டு ஓடும் குதிரையை !
கொஞ்சம் நில் என்றால்...
இறந்து விடும் இந்த நொடிக்காய்
காத்திருப்பதில்லை காலம் !
அடுத்த நொடியை
பிரசவிக்கச் சென்று விடுகிறது
அவசரமாக என்றது!
அது வரை அமைதியாக
இருந்த மனம்...
அட இது என் கற்பனையா என
தாவிக் குதித்தது குரங்காய்!
அடுத்த நினைவிற்கு !
உண்மை தான்..
ஒவ்வொரு நொடியும் உயிர் வாழ்வதில்லை
ஒரு நொடிக்கு மேல்!
மனம் தாவிக் குதிக்க...இப்போது
இளைப்பாறிக் கொண்டிருக்கிறது குதிரை...
என் கற்பனைக் குதிரை!
Friday, June 12, 2009
செல்ல நாய் !
ஆளில்லா வீட்டில் ..
ஓடிக் களைத்து..
கத்திப் பின் ..
கண் செருக உறங்கி...
விழித்துப் பார்த்த ...
என்னை ...
சிவந்த கண்ணாய்..
கூர் நகம் கொண்டு ...
பற்கடிப்புடன்..
தலை விரி கோலமாய்..
இழுத்துக் கொண்டது..
தனிமை!!
நான்...!?
செல்ல நாய்க் குட்டியாம்!
காத்திருக்கிறேன் எஜமானன் வரவுக்காய்!
ஓடிக் களைத்து..
கத்திப் பின் ..
கண் செருக உறங்கி...
விழித்துப் பார்த்த ...
என்னை ...
சிவந்த கண்ணாய்..
கூர் நகம் கொண்டு ...
பற்கடிப்புடன்..
தலை விரி கோலமாய்..
இழுத்துக் கொண்டது..
தனிமை!!
நான்...!?
செல்ல நாய்க் குட்டியாம்!
காத்திருக்கிறேன் எஜமானன் வரவுக்காய்!
வினாக் கவிதை !
நழுவுகின்ற இந்த ஒரு
நொடியின் இறுதிப் புள்ளியில்...
தொக்கி நிற்கின்றன வினாக்கள்!
எதைக் கவிதையாக்க?..
எப்படி கவிதையாக்க?..
சிந்தனைச் சுரப்பு
வற்றி விடும் அந்த ஒரு
நொடியின் இறுதிப் புள்ளியில் ...
வினாக்களும் கவிதையாகின்றன!!
நொடியின் இறுதிப் புள்ளியில்...
தொக்கி நிற்கின்றன வினாக்கள்!
எதைக் கவிதையாக்க?..
எப்படி கவிதையாக்க?..
சிந்தனைச் சுரப்பு
வற்றி விடும் அந்த ஒரு
நொடியின் இறுதிப் புள்ளியில் ...
வினாக்களும் கவிதையாகின்றன!!
Tuesday, May 19, 2009
என் உலகம் !
என்றுமே ஒட்டாத கீழ்வானமும் கடலும்,
என்ன பேசிக்கொள்கின்றன ?
இத்தனை சிவப்பு வானில்...!
சின்ன இடைவெளியில் ,
உடை மாற்றிக்கொள்கிறது வானம்!
ரோட்டோர மொட்டை மரம்
வெட்கமின்றி சிரிக்கிறது ...
வட்ட நிலவொளியில் !!!
கசங்கிய காகிதக் குப்பைகளையும் ,
கட்டி இழுக்கிறது காற்று!
என் ஜன்னல் திரை விலக்க....
வண்ணங்கள் எத்தனை!
தொட்டி மீன்களை துணைக்கழைத்தேன்...
எட்டிப்பாரென்று...
சிரித்துக்கொண்டே சொன்னது ..
என் ஜன்னல் வழி உலகம் ..
நீயும் இந்த வீடும் மட்டுமென்று!!
வண்ணங்களில் என்னைச் சிதறவிட்ட நான்...
ஒன்றை மறந்து விட்டேன்...
எப்போதும் போல்,
என் பேனாவின் ,
ஒற்றைச் சொல்லுக்காய் ..
காற்றில் ஆடியபடி காத்திருக்கும்,
ஓர் வெற்றுக் காகிதத்தை !!
என்ன பேசிக்கொள்கின்றன ?
இத்தனை சிவப்பு வானில்...!
சின்ன இடைவெளியில் ,
உடை மாற்றிக்கொள்கிறது வானம்!
ரோட்டோர மொட்டை மரம்
வெட்கமின்றி சிரிக்கிறது ...
வட்ட நிலவொளியில் !!!
கசங்கிய காகிதக் குப்பைகளையும் ,
கட்டி இழுக்கிறது காற்று!
என் ஜன்னல் திரை விலக்க....
வண்ணங்கள் எத்தனை!
தொட்டி மீன்களை துணைக்கழைத்தேன்...
எட்டிப்பாரென்று...
சிரித்துக்கொண்டே சொன்னது ..
என் ஜன்னல் வழி உலகம் ..
நீயும் இந்த வீடும் மட்டுமென்று!!
வண்ணங்களில் என்னைச் சிதறவிட்ட நான்...
ஒன்றை மறந்து விட்டேன்...
எப்போதும் போல்,
என் பேனாவின் ,
ஒற்றைச் சொல்லுக்காய் ..
காற்றில் ஆடியபடி காத்திருக்கும்,
ஓர் வெற்றுக் காகிதத்தை !!
Tuesday, May 12, 2009
என்று பெய்யும் மழை!
சோவெனக் கொட்டிய மழை நின்று ,
சொட்டு சொட்டாய் வடிகிறது...
ஓடும் மணித்துளியாய் ,
உருளும் நீர்த்துளி...
ஒட்டுமொத்த அழுக்கையும்
கழுவி விட்ட களைப்பில் !
நன்று தான் ....!
என்று தான் பெய்யும் மழை....
நிழலாய் துரத்தும் நேற்றைய கோபமும்,
காரணம் சொல்லக் கற்றுக்கொள்ளும் கபடமும்..
குப்பையாய் கொட்டிக் கிடக்கும் மனதில்?
முடிந்தால் சில துளிகளாவது
பெற்றுத் தாருங்களேன் ....
மனதில் மிச்சமிருக்கும் எச்சம் துடைக்க.....!
சொட்டு சொட்டாய் வடிகிறது...
ஓடும் மணித்துளியாய் ,
உருளும் நீர்த்துளி...
ஒட்டுமொத்த அழுக்கையும்
கழுவி விட்ட களைப்பில் !
நன்று தான் ....!
என்று தான் பெய்யும் மழை....
நிழலாய் துரத்தும் நேற்றைய கோபமும்,
காரணம் சொல்லக் கற்றுக்கொள்ளும் கபடமும்..
குப்பையாய் கொட்டிக் கிடக்கும் மனதில்?
முடிந்தால் சில துளிகளாவது
பெற்றுத் தாருங்களேன் ....
மனதில் மிச்சமிருக்கும் எச்சம் துடைக்க.....!
Monday, April 20, 2009
என்னைப் போல் நீ !!!
நீ நிற்க நானும் நிற்கிறேன் !
நீ நடக்க நானும் நடக்கிறேன்!
வடிவொத்திருக்கிறேன்!
வாய் பேசுவதில்லை!
என்ன விந்தை !
என்னைப் போல் நீ!
உன்னோடு உரசி நின்று,
வேடிக்கை பார்க்கிறேன் !
நீள்கிறேன்! நகர்கிறேன்!
என்ன தான் என் வாழ்க்கை ?
தினம் நீள்வட்டமாய் என்னைச் சுற்றும் ,
ஏராளம் வினாக்கள்!
குப்பை தொட்டியில் வீழும்
வெள்ளைக் காகிதமாய்...
குளத்தில் எறியும் கூழாங்கல்லாய்..
காரணமின்றி , சில வேளை..
மர்மமாய் மறைந்தும் போகிறேன்!
மௌனமும் மறைதலுமே என் வாழ்க்கையோ!
ஒரு வட்டத்தில் சிக்கிக்கொண்ட ...
ஒற்றைப் புள்ளி நான் !
ம்ம்ம்.. என்ன செய்ய?
உன் நிழலாய்ப் போய்விட்டேனே !!!!
நீ நடக்க நானும் நடக்கிறேன்!
வடிவொத்திருக்கிறேன்!
வாய் பேசுவதில்லை!
என்ன விந்தை !
என்னைப் போல் நீ!
உன்னோடு உரசி நின்று,
வேடிக்கை பார்க்கிறேன் !
நீள்கிறேன்! நகர்கிறேன்!
என்ன தான் என் வாழ்க்கை ?
தினம் நீள்வட்டமாய் என்னைச் சுற்றும் ,
ஏராளம் வினாக்கள்!
குப்பை தொட்டியில் வீழும்
வெள்ளைக் காகிதமாய்...
குளத்தில் எறியும் கூழாங்கல்லாய்..
காரணமின்றி , சில வேளை..
மர்மமாய் மறைந்தும் போகிறேன்!
மௌனமும் மறைதலுமே என் வாழ்க்கையோ!
ஒரு வட்டத்தில் சிக்கிக்கொண்ட ...
ஒற்றைப் புள்ளி நான் !
ம்ம்ம்.. என்ன செய்ய?
உன் நிழலாய்ப் போய்விட்டேனே !!!!
Thursday, April 16, 2009
ஓர் அழுகுரல் !
கஸ்தூரி மஞ்சளிட்டு, கையளவு திலகமிட்டு,
கானல் நீரப்போலே கண்ணுரங்கிப் போறவளே...
எனக்கும் வழி இருக்கு...
குப்பைத்தொட்டி கோயில் குளம்...
கவலையின்றிப் போய் வாடி ..
பொட்டையாப் பொறந்த என்ன..
கொல்லவும் மனமும் இல்ல ..
உன் வேதனை தீயாலே ..
வெளிட்சமூட்டி போறவளே..
கவலையின்றிப் போய் வாடி..
என்னப்பன் என்னக் கண்டு ..
ஏளனமாச் சிரிச்சானே ..
உன் விழி நீரெடுத்து ..
என் விழி துடைப்பேனே...
கவலையின்றிப் போய் வாடி..
பெற்றன்னை இடி தாங்கி..
பெண் என்னை காத்தாயே..
பேர் வாங்கித் தருவேன்டி ..
பெற்றவளே போய் வாடி !
காலங்களும் மாறி விடும் ..
கவலையின்றிப் போய் வாடி !.
கானல் நீரப்போலே கண்ணுரங்கிப் போறவளே...
எனக்கும் வழி இருக்கு...
குப்பைத்தொட்டி கோயில் குளம்...
கவலையின்றிப் போய் வாடி ..
பொட்டையாப் பொறந்த என்ன..
கொல்லவும் மனமும் இல்ல ..
உன் வேதனை தீயாலே ..
வெளிட்சமூட்டி போறவளே..
கவலையின்றிப் போய் வாடி..
என்னப்பன் என்னக் கண்டு ..
ஏளனமாச் சிரிச்சானே ..
உன் விழி நீரெடுத்து ..
என் விழி துடைப்பேனே...
கவலையின்றிப் போய் வாடி..
பெற்றன்னை இடி தாங்கி..
பெண் என்னை காத்தாயே..
பேர் வாங்கித் தருவேன்டி ..
பெற்றவளே போய் வாடி !
காலங்களும் மாறி விடும் ..
கவலையின்றிப் போய் வாடி !.
Wednesday, April 15, 2009
அவரால்..!
வெள்ளைச் சிறகொன்று கேட்டேன்..
விண்ணில் பறக்க,
வண்ணச் சிறகொன்று தந்தார்...
பறந்து பாரென்று!
வேடிக்கை பார்த்தே ,
விரயமாக்கினேன் காலத்தை...
சிறகுகள் உதிர ,
மீண்டும் வேண்டுமென்றேன்!
நடந்து பாரென்றார்...
நடந்தேன்.. நடந்தேன்..
மிக விரைவாக ...
விர்ரென்று பறந்தேன்!
இறக்கை முளைத்திருந்தது !
திடுக்கிட்டு விழித்தேன்!
இது திடீர்க் கனவு !
ஆம் ! சில கொடுக்கப்படுகின்றன..
சில பறிக்கப்படுகின்றன..
"அவரால்"... நாம் கற்றுக்கொள்ள!
விண்ணில் பறக்க,
வண்ணச் சிறகொன்று தந்தார்...
பறந்து பாரென்று!
வேடிக்கை பார்த்தே ,
விரயமாக்கினேன் காலத்தை...
சிறகுகள் உதிர ,
மீண்டும் வேண்டுமென்றேன்!
நடந்து பாரென்றார்...
நடந்தேன்.. நடந்தேன்..
மிக விரைவாக ...
விர்ரென்று பறந்தேன்!
இறக்கை முளைத்திருந்தது !
திடுக்கிட்டு விழித்தேன்!
இது திடீர்க் கனவு !
ஆம் ! சில கொடுக்கப்படுகின்றன..
சில பறிக்கப்படுகின்றன..
"அவரால்"... நாம் கற்றுக்கொள்ள!
Thursday, April 9, 2009
முத்தமிட்ட மழையும்! சத்தமிட்ட சருகும் !
சட்டென போட்ட தூறலுக்கு ..
ஓரமாய் நின்றேன் சாலையில்...
சட சடவென ஓசை கேட்க ..
ஆவலாய் கேட்டேன் ஆசையில் ..
முத்தமிட்ட மழை நோக்கி ,
சத்தமிட்டது சருகு !!!!
"சத்தமின்றி முத்தம் தா மழையே!".
பெற்றவளுக்கே முத்தம் இல்லையா?
மேகம் சண்டையிட,
மின்னலாய் தெறித்தது கோபம்!.
மெல்ல சிரித்த மழைத்துளியோ ,
முத்தமிட்டது மலரை ..
மலர்ந்தது .. மௌனம்... மட்டுமே!!!
புரிந்தது ..சத்தமிடலே சருகின் தனித்துவம்!
மௌனமன்று!!
எட்டிப்பார்த்த என்னையும் ..
இலவசமாய் முத்தமிட்டது மழைத்துளி !
முத்தமிடலே மழையின் தனித்துவமோ!
எது எப்படியோ...
எனக்கே எனக்கான உலகில்..
மழை முத்தமிடுகிறது !!!
சருகு சத்தமிடுகிறது!!!
ஓரமாய் நின்றேன் சாலையில்...
சட சடவென ஓசை கேட்க ..
ஆவலாய் கேட்டேன் ஆசையில் ..
முத்தமிட்ட மழை நோக்கி ,
சத்தமிட்டது சருகு !!!!
"சத்தமின்றி முத்தம் தா மழையே!".
பெற்றவளுக்கே முத்தம் இல்லையா?
மேகம் சண்டையிட,
மின்னலாய் தெறித்தது கோபம்!.
மெல்ல சிரித்த மழைத்துளியோ ,
முத்தமிட்டது மலரை ..
மலர்ந்தது .. மௌனம்... மட்டுமே!!!
புரிந்தது ..சத்தமிடலே சருகின் தனித்துவம்!
மௌனமன்று!!
எட்டிப்பார்த்த என்னையும் ..
இலவசமாய் முத்தமிட்டது மழைத்துளி !
முத்தமிடலே மழையின் தனித்துவமோ!
எது எப்படியோ...
எனக்கே எனக்கான உலகில்..
மழை முத்தமிடுகிறது !!!
சருகு சத்தமிடுகிறது!!!
Thursday, March 26, 2009
தேடல்...
ஜன்னலோரமாய் ...
வேடிக்கை பார்த்து...
விரல் நுனி நகம் கடித்து ...
விழி அயரும் வேளை....
சுழலும் மின்விசிறியின் சத்தமும் ..
சூறாவளியாய்....
எத்தனை முறை பார்த்தாலும் ...
இப்படித்தானிருப்பேன் என்றது...
கடிகார முள்ளும் கோபமாய் ...
எது எப்படியாயினும்....
மாலை முதல் இரவு ஏழு வரை...
எனக்கான தேடல் ....
" நீ " மட்டுமே என்று...
கண்டுகொண்டேன் ஒரு நாள் ...
உனக்கான காத்திருப்பில் !!!!!!
வேடிக்கை பார்த்து...
விரல் நுனி நகம் கடித்து ...
விழி அயரும் வேளை....
சுழலும் மின்விசிறியின் சத்தமும் ..
சூறாவளியாய்....
எத்தனை முறை பார்த்தாலும் ...
இப்படித்தானிருப்பேன் என்றது...
கடிகார முள்ளும் கோபமாய் ...
எது எப்படியாயினும்....
மாலை முதல் இரவு ஏழு வரை...
எனக்கான தேடல் ....
" நீ " மட்டுமே என்று...
கண்டுகொண்டேன் ஒரு நாள் ...
உனக்கான காத்திருப்பில் !!!!!!
Monday, March 23, 2009
அவனும்,அவளும் !
துடித்த உள்ளத்தை ,
அடக்க இயலவில்லை !
திரும்பினாள் அவன் பக்கம்..
இயக்கமே இன்றி அவன்!
பார்வையின் அர்த்தம்,
நட்பு தானோ?
திணறினான் அவன்..இதோ
நாலைந்து வருடமாய்...
அவனும் அவளும் நண்பர்கள்
நாகரீகமோ நட்போ கருதி
சொல்லவில்லை அவளும்!
கேட்கவில்லை அவனும்!
இதோ... இன்று நினைத்தாள்
சொல்லலாமென்று...
அவன் விழிகளிலும் துளிகள்
விட்டுப் பிரிவோமென்று...
முடிவெடுத்த அவனும் ,
விடைபெற்றான்!
நட்பால் - விதி
செய்த விளையாட்டால்!
கடைசியாக ஒரு பார்வை..
பதிந்து விட்டது அவனில்!
இதோ.. வாழ்ந்து கொண்டிருக்கிறான்!
எதிர் பாரா சந்திப்பு!
அவள் எதிர்கொள்கிறாள்!
நெற்றியில் நரை முடி...
பரிமாறிக்கொண்டனர் பார்வையை ..
பல வருடங்கழித்து!
ஆம் ! இருவருமே மன(ண)மின்றி
வாழ்ந்திருந்தனர் தம் எண்ணங்களோடு!!!!
அடக்க இயலவில்லை !
திரும்பினாள் அவன் பக்கம்..
இயக்கமே இன்றி அவன்!
பார்வையின் அர்த்தம்,
நட்பு தானோ?
திணறினான் அவன்..இதோ
நாலைந்து வருடமாய்...
அவனும் அவளும் நண்பர்கள்
நாகரீகமோ நட்போ கருதி
சொல்லவில்லை அவளும்!
கேட்கவில்லை அவனும்!
இதோ... இன்று நினைத்தாள்
சொல்லலாமென்று...
அவன் விழிகளிலும் துளிகள்
விட்டுப் பிரிவோமென்று...
முடிவெடுத்த அவனும் ,
விடைபெற்றான்!
நட்பால் - விதி
செய்த விளையாட்டால்!
கடைசியாக ஒரு பார்வை..
பதிந்து விட்டது அவனில்!
இதோ.. வாழ்ந்து கொண்டிருக்கிறான்!
எதிர் பாரா சந்திப்பு!
அவள் எதிர்கொள்கிறாள்!
நெற்றியில் நரை முடி...
பரிமாறிக்கொண்டனர் பார்வையை ..
பல வருடங்கழித்து!
ஆம் ! இருவருமே மன(ண)மின்றி
வாழ்ந்திருந்தனர் தம் எண்ணங்களோடு!!!!
Friday, March 20, 2009
பாடம்!
மூச்சிரைக்க ஓடி வந்து ,
பேச்சின்றிச் செல்லும் பேரலையின் ...
சங்கேத பாஷயை மொழிபெயர்க்கக்
காத்திருந்தேன் கரையோரம்...
முன்னந்தலையில் முட்டிக்கொண்ட மேகமிரண்டும்,
மெல்லச் சிரித்தன என்னைப்பார்த்து !
ஒற்றை மரத்தைச் சுற்றி
ஓடி விளையாடிய நாள் துவங்கி,
மொட்டை மாடியில் முகமூடித்
தூங்கிய நேற்று வரை....
ஓராயிரம் நினைவுகள் !!!
கடைசியில் ........
காதோரம் தெறித்த கடல்நீரோ சொன்னது ....
கற்றுத் தந்தேன் உனக்கு கவி எழுதவென்று!!!!
பேச்சின்றிச் செல்லும் பேரலையின் ...
சங்கேத பாஷயை மொழிபெயர்க்கக்
காத்திருந்தேன் கரையோரம்...
முன்னந்தலையில் முட்டிக்கொண்ட மேகமிரண்டும்,
மெல்லச் சிரித்தன என்னைப்பார்த்து !
ஒற்றை மரத்தைச் சுற்றி
ஓடி விளையாடிய நாள் துவங்கி,
மொட்டை மாடியில் முகமூடித்
தூங்கிய நேற்று வரை....
ஓராயிரம் நினைவுகள் !!!
கடைசியில் ........
காதோரம் தெறித்த கடல்நீரோ சொன்னது ....
கற்றுத் தந்தேன் உனக்கு கவி எழுதவென்று!!!!
Wednesday, March 18, 2009
மறந்து போன கவிதை ?!
எண்ணத்தை வண்ணமாக்கி ...
மனதில் உன்னை கருத்தாங்கி...
எழுத்தாணி கொண்டு எழுதி ..
மன்றத்தில் உன்னை பெற்றெடுக்க...
மாதக்கணக்கில் மௌனித்தேன் !
நீயோ....
மலரும் முன்னே கருகி ..
சருகாகி விட்ட சலையோரப் பூப்போல் ,
சொற்ப வாழ்நாளில் போன
சிற்ப கவிதையே..!
ஆனந்த வலி தான் எனக்கு..
ஆகையால் பெற்றெடுப்பேன் உன்னைப்போல்
அன்றாடம் பல நூறு !!!!
மனதில் உன்னை கருத்தாங்கி...
எழுத்தாணி கொண்டு எழுதி ..
மன்றத்தில் உன்னை பெற்றெடுக்க...
மாதக்கணக்கில் மௌனித்தேன் !
நீயோ....
மலரும் முன்னே கருகி ..
சருகாகி விட்ட சலையோரப் பூப்போல் ,
சொற்ப வாழ்நாளில் போன
சிற்ப கவிதையே..!
ஆனந்த வலி தான் எனக்கு..
ஆகையால் பெற்றெடுப்பேன் உன்னைப்போல்
அன்றாடம் பல நூறு !!!!
Thursday, March 12, 2009
அன்றொரு நாள் ...
கார்முகில்கள் இரண்டு காதல் வயப்பட ,
கருவில் உருவான மழைத்துளி ,
புன்னகைத்த பூக்களில் மனமிழந்து ,
மலரதை முத்தமிட்ட மறுநொடி ....
கட்டவிழ்த்த காற்று வந்து கண்டிக்க ,
இதழ் ஊர்ந்த மழைத்துளி ,
இலைகாம்பில் உருண்டோடி ,
உரசி நின்றது வேரடியில் ....
தன் காதல் கதை சொல்லி ,
தற்கொலைக்கு முயற்சிக்க ,
தயங்காமல் நீரை வேர் உறிய ,
மாண்டாலும் துளிகள் மலரோடு கலந்தன ....
இம்மழைத்துளி தான் கொண்ட காதல் ,
எம் வீட்டுச் செடிகளில் ஏராள ரோஜாக்கள் !!!
எட்டிப்பறிக்க எண்ணினேன் ,
என்றாலும் முடியவில்லை !
ஏனென்றால் ...
என்னைப் பார்த்து சிரித்தன,
இதழ் மீது இரு துளிகள் !!
கருவில் உருவான மழைத்துளி ,
புன்னகைத்த பூக்களில் மனமிழந்து ,
மலரதை முத்தமிட்ட மறுநொடி ....
கட்டவிழ்த்த காற்று வந்து கண்டிக்க ,
இதழ் ஊர்ந்த மழைத்துளி ,
இலைகாம்பில் உருண்டோடி ,
உரசி நின்றது வேரடியில் ....
தன் காதல் கதை சொல்லி ,
தற்கொலைக்கு முயற்சிக்க ,
தயங்காமல் நீரை வேர் உறிய ,
மாண்டாலும் துளிகள் மலரோடு கலந்தன ....
இம்மழைத்துளி தான் கொண்ட காதல் ,
எம் வீட்டுச் செடிகளில் ஏராள ரோஜாக்கள் !!!
எட்டிப்பறிக்க எண்ணினேன் ,
என்றாலும் முடியவில்லை !
ஏனென்றால் ...
என்னைப் பார்த்து சிரித்தன,
இதழ் மீது இரு துளிகள் !!
Tuesday, March 10, 2009
ரோஜாத் தோழி !
இதழ் விரித்த இளம் ரோஜா அவள் ,
எனை கண்டு வெட்கிச் சிவக்க,
என்ன விஷயம் என்றேன்!
மொட்டவிழ்த்த என்னை ...
வட்டமிட்டது வண்டு என்றாள் !
இழுத்து முகர்ந்த நான் ...
உன்னை விட மாட்டேன் ,
ஏதோ ஒரு வண்டுக்காய்!
சொல்லி விட்ட என்னை ...
சோகமாய் பார்த்தாள் !
வாடி விட்ட என்னவள் ,
வாசமின்றிப் போய் விட்டாள் ?
வண்டு மட்டும் வருகிறது
வாடிக்கையாய்....
என்னவளைத் தேடி !!!!
எனை கண்டு வெட்கிச் சிவக்க,
என்ன விஷயம் என்றேன்!
மொட்டவிழ்த்த என்னை ...
வட்டமிட்டது வண்டு என்றாள் !
இழுத்து முகர்ந்த நான் ...
உன்னை விட மாட்டேன் ,
ஏதோ ஒரு வண்டுக்காய்!
சொல்லி விட்ட என்னை ...
சோகமாய் பார்த்தாள் !
வாடி விட்ட என்னவள் ,
வாசமின்றிப் போய் விட்டாள் ?
வண்டு மட்டும் வருகிறது
வாடிக்கையாய்....
என்னவளைத் தேடி !!!!
Monday, March 9, 2009
நானும் காதல் கொண்டேன் !
கடுங்குளிரில் வியர்க்கிறதோ ...
புல்வெளியில் பனித்துளிகள் !
கதிரென்னும் கைக்குட்டையால்...
காலையிலே துடைக்கிறதோ!
நிலமகளின் இடைதன்னை...
இழுக்கிறதோ கடலலைகள்!
அதில் நாணி அவள் ஓட ...
அழிகிறதோ என் அடிச்சுவடு !
மங்கையவள் மார்பகமோ ....
மலை முகடு இவ்விரண்டும்!
மனம் மயங்கும் கதிரவனோ...
துயிலுகிறான் அவள் நெஞ்சத்தில்!
இமை மூடி திறக்கும் இருநொடிக்குள்...
கண்டுவிட்டேன் இத்தனையும் !
கண்ட பின்னே காதலித்தேன் .....
நானும் இந்த நானிலத்தை!
புல்வெளியில் பனித்துளிகள் !
கதிரென்னும் கைக்குட்டையால்...
காலையிலே துடைக்கிறதோ!
நிலமகளின் இடைதன்னை...
இழுக்கிறதோ கடலலைகள்!
அதில் நாணி அவள் ஓட ...
அழிகிறதோ என் அடிச்சுவடு !
மங்கையவள் மார்பகமோ ....
மலை முகடு இவ்விரண்டும்!
மனம் மயங்கும் கதிரவனோ...
துயிலுகிறான் அவள் நெஞ்சத்தில்!
இமை மூடி திறக்கும் இருநொடிக்குள்...
கண்டுவிட்டேன் இத்தனையும் !
கண்ட பின்னே காதலித்தேன் .....
நானும் இந்த நானிலத்தை!
Friday, March 6, 2009
தவிப்பு
தொலைதூரப் பார்வை...
தூண்டா விளக்குடன்,
ஒற்றையடி பாதையில்,
ஓட்டமும் நடையுமாய்...
உணர்ச்சிப்பெருக்காய்... அவள்...
கேட்டேன் ஏனென்று?
சொன்னாள் சிறு நகையோடு!
ஊடலில் சென்ற கணவன்,
ஊர் திரும்பும் நேரமது!
தூண்டா விளக்குடன்,
ஒற்றையடி பாதையில்,
ஓட்டமும் நடையுமாய்...
உணர்ச்சிப்பெருக்காய்... அவள்...
கேட்டேன் ஏனென்று?
சொன்னாள் சிறு நகையோடு!
ஊடலில் சென்ற கணவன்,
ஊர் திரும்பும் நேரமது!
Subscribe to:
Comments (Atom)